கர்த்தார்ப்பூர் சாகிப் தாழ்வாரம் திறப்பு விழாவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சுல்தான்பூர் லோடி குருத்துவாராவில் வழிபாடு நடத்தினார்.
பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் சாகிப் குருத்துவாராவையும், பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூரில் உள்ள குருத்துவாரா தர்பார் சாகிப்பையும் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்கப்பட்டு இரு நாட்டு எல்லையில் பொதுவான சோதனைச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாழ்வாரத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து சுல்தான்பூர் லோடிக்குச் சென்ற பிரதமர் அங்குள்ள பீர் சாகிப் குருத்துவாராவில் வழிபாடு நடத்தினார்.
Discussion about this post