அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒருவாரக் காலப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். ஹூஸ்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளும் இந்திய வம்சாவளியினரும் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் வகையில் அமெரிக்காவின் டெல் லூரியன், இந்தியாவின் பெட்ரோ நெட் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமானது. இதற்கான முறையான உடன்பாடு, இரு நிறுவனங்களின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற்று அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கையொப்பமாகும்.
Discussion about this post