நாட்டு மக்கள் உடல் உறுதியை பேணும் வகையில், ‘ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்.
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் யோகா தினம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் ‘ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு ‘உடல் உறுதியை பேணுவோம்’ என உறுதிமொழி ஏற்க இருக்கின்றனர். மேலும் இந்த உறுதிமொழியை அனைத்து கல்லூரி மாணவ-மாணவியர்களும் எடுக்க வேண்டும் என்று கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post