உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஷ்வநாதர் கோயில் பிரகாரத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டியப் பின்னர் உரையாற்றிய பிரதமர், காசி விஷ்வநாதர் கோயில் மீது பலமுறை எதிரிகளின் கவனம் இருந்ததாகவும், பலமுறை இக்கோயில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டார். எனினும், கோயிலுக்கு சிறப்பு சக்தி உள்ளதால் மக்களுக்கு தொடர்ந்து பலத்தை அளித்து வருவதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
காசிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துதரும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post