பிரதமர் மோடி ஆஸ்திரேலிய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படியே ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சிலைக்கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார். மேலும் பொன்மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Discussion about this post