பிரதமர் மோடி ஓய்வு எடுக்காமல் நாட்டுக்காக உழைப்பதாகவும், ராகுல் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக சாடினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தான் கடந்த 20 ஆண்டுகளாக மோடியை பற்றி அறிந்து வைத்துள்ளதாகவும், அவர் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாள்தோறும் 18 மணி நேரம் உழைப்பதாக கூறினார். ராகுல் ஓய்வு எடுப்பதற்காக, சில மாதங்களில் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாக சாடினார்.
2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக பேசிய அமித் ஷா, அந்த நேரத்தில் மன்மோகன்சிங் வாய் திறந்து பேச மறுத்து வந்தாகவும், இதனை நினைத்தால் இப்போதுகூட மனது வலிப்பதாக அமித் ஷா கூறினார்.
காங்கிரஸ் கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டிய அமித் ஷா, நாடு முழுவதும் மக்கள் மோடி என்ற உணர்வுப்பூர்வமான முழக்கங்களை காண முடிவதாகவும், மீண்டும் மோடிய தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post