இந்தியா – சிங்கப்பூர் இடையிலான முதல் ஹாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிபுணர்களுக்கு இடையே நடத்தப்படும் போட்டி ஹாக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, சிங்கப்பூரில் நடத்தப்பட்ட போட்டியில் 10 வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கப்பட்டது.
முதல் முறையாக இந்த ஹாக்கத்தான் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. தொடர்ந்து 36 மணிநேரம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இவர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த என்ஐடி- க்கு 2-வது பரிசு கிடைத்தது. இந்தநிலையில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்து பாராட்டினார்.
Discussion about this post