பிரதமர் மோடி அவர்கள் 2019 முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இந்தப் பயணங்களுக்காகவே 22 கோடியே 76 லட்சத்து 76,934 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதே 2019லிருந்து குடியரசுத் தலைவர் 8 வெளிநாட்டுப் பயணங்களினை மேற்கொண்டுள்ளார். அவருக்கான பயணச்செலவு 6 கோடியே 24 லட்சத்து 31,424 ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த எட்டு பயணங்களில் ஒரு பயணத்தினை மட்டும் திரெளபதி முர்மு செய்துள்ளார். மீதமுள்ள ஏழு பயணங்களைச் செய்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 86 வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது பயணங்களுக்கான செலவினம் 20 கோடியே 87 லட்சத்து 1,475 ஆகும்.
Discussion about this post