17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டததில் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மக்களவைக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. முதல் கூட்டத்தொடரில் உடனடி முத்தலாக் தடை மசோதா, தொழிலாளர் சட்ட மசோதா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post