கடந்த 2022ன் மே மாதம் ஆஸ்திரேலிய தேர்தலில் அந்தோணி அல்பனீஸ் வென்று ஆஸ்திரேலியாவின் பிரதமரானார். அவர் இந்தியாவிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 8 ஆம் தேதி அவர் இந்தியா வருகிறார். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து வணிகம் சார்ந்தும் கனிமங்கள் சார்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையே அகமதாபாத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே மார்ச் 8 ஆம் தேதி இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், பிரதமர் மோடியுடன் சேர்ந்து டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post