சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதையே கொள்கையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வீடுகளுக்கு சமையல் எரிவாயுவை குழாய் மூலம் வினியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில், சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் 129 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2020-ம் ஆண்டிற்குள் இது இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post