பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சிறப்பு தனி விமானங்கள் சென்னை விமான நிலையம் வரும் நேரத்தில் மற்ற விமானங்கள் பறக்க மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது.
மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டிச் சென்னை விமான நிலையத்தில் பல வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரு தலைவர்களின் தனி விமானங்கள் சென்னை விமானத்தில் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பிருந்தே எந்த விமானமும் தரையிறங்கவோ, புறப்படவோ அனுமதி கிடையாது என மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்குக் கடற்கரை வழியாக வான்பரப்பில் கடந்து செல்லும் சில விமானங்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post