புதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைப்பதற்கும், பயன்படுத்துவதற்கும், புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி, சுற்றுச்சூழல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்பேரணியை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Discussion about this post