அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்கப் படைகளை அதிகரிக்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களைத் தடுக்க அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத குடியேற்றம் போன்றவற்றால், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகக் கூறி, ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
சுமார் மூவாயிரத்து 145 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், வீரர்களின் எண்ணிக்கைய அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Discussion about this post