டெல்லியில், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை பரப்ப டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனால் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அங்கு 7 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் அகாடமியை அமைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தலைமையில் அமைய உள்ள தமிழ் அகாடமிக்கு, துணைத் தலைவராக டெல்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அகாடமிக்கு விரைவில் இடம் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post