நாடு முழுவதும் அடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவத்துக்காக ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரமர் நரேந்திர மோடி, பாரம்பரிய மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்குப் பாடுபட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். ஆயுஷ் துறையில் புகழ்பெற்றவர்களின் சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். அரியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயுஷ் நலவாழ்வு மையங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
Discussion about this post