வெளிநாட்டு தொழில்நுட்பங்களை வனப்பகுதி-பூங்காக்களில் அமல்படுத்த திட்டம்

சென்னை பெருங்குடியில் உயிரிப் பல்வகை சட்டத்தின் பலன்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை பேசுகையில், பல்லுயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றால் ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும், தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் ஆய்வு செய்த தொழில்நுட்பங்களை தமிழக வனப்பகுதிகளிலும், பூங்காக்களிலும் அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version