தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, பெருவுடையார் சன்னதி கோபுர கலசம், வேதமந்திரங்கள் முழங்க பாலாலயம் செய்யப்பட்டு கீழே இழக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், அடுத்த மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பெரிய கோயிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெருவுடையார் சன்னதி கோபுர கலசம் ஆகம விதிகளின் படி, சிவாச்சாரியார்கள் வேத மந்தரங்கள் ஓத பாலாலயம் செய்யப்பட்டு கீழே இறக்கப்பட்டது. பின்னர், கலசத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.
Discussion about this post