கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு நடத்துவதற்காக, குவிந்த பக்தர்களால் உத்தரகாண்ட் மலைச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி ஆகிய 4 இடங்களும், இந்து மக்கள் கட்டாயம் வழிபடக்கூடிய புனித இடங்களாக கருதப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் இருக்கும், இக்கோயில்கள் கோடை விடுமுறைக் காலங்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த 4 இடங்களில் வழிபாடு நடத்த உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே தேவ்பிரயாக் என்னும் ஊரில் உள்ள மலைச்சாலையில், வழிபாடு நடத்துவதற்காக ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Discussion about this post