விடுமுறை தினத்தை முன்னிட்டு அத்திவரதரை தரிசிக்க ஏராளமானோர் காஞ்சிபுரத்தில் குவிந்து உள்ளனர்.
காஞ்சி அத்திவரதர் உற்சவம் தொடங்கி இன்று ஏழாவது நாளை ஒட்டி சுவாமிக்கு மஞ்சள் நிறத்திலான பட்டாடை போர்த்தப்பட்டு பலவித வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் காலை 5 மணி முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.பக்தர்கள் கோவிலின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே அனுப்பப்படுவதால் அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மேலும் கோவிலின் இரண்டு வீதிகள் தாண்டி தெற்கு மாட வீதி வழியாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
Discussion about this post