புதுச்சேரி குமராபாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட குமராபாளையம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறக்க வலியுறுத்தியும், தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் வழங்கக் கோரியும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சாலைகளில் உள்ள தெரு விளக்குகள் எரியாததால் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். போராட்டத்தின்போது மண்பானைகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post