சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் செல்போன் மூலம் படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் கோயில் கருவறை உள்ளிட்ட பகுதிகளை செல்போன் மூலம் படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கோயில் கருவறை உள்ளிட்ட சன்னிதானத்தின் பல பகுதிகளில் செல்போன் மூலம் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஆங்காங்கே டிஜிட்டல் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post