இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை பெறும் விதமாக பிலிப்பைன்ஸ் நாடு இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது என அந்நாட்டு ராணுவ செயலாளர் டெல்பின் லோரன்சானா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யா நாட்டின் நிறுவனம் ஒன்றுடன் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 200 முதல் 300 கிலோ எடையுடன் நடுத்தர தொலைவு சென்று தாக்ககூடிய ஏவுகணையாகும். இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இந்தியா ஏவுகணைகளை வழங்க உள்ளது. நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றில் இருந்து பயன்படுத்தக்கூடியது, பிரமோஸ் ஏவுகணை. எனவே இவை பிலிப்பைன்ஸ் நாட்டு கடலோர பாதுகாப்பு பணிகள் மற்றும் விமானப்படைக்கு வாங்கப்பட உள்ளது. இதற்காக 300 பில்லியன் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செயலாளார் டெல்பின் லோரன்சானா தெரிவித்துள்ளார்.
Discussion about this post