சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணி இந்த மாத இறுதியில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழடியில் இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி தமிழக தொழில் துறை சார்பாக 5-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. 5-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 46 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில், சுடுமண்ணால் ஆன பொருட்கள், இரும்பு தாதுக்களால் ஆன பொருட்கள், பெண்கள் அணியும் அணிகலன்கள் என 650-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அகழாய்வு பணியின் போது கிடைத்த பொருட்களால் இந்த பகுதி பழங்காலத்தில் தொழில்நகரமாக இருந்திருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 6-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Discussion about this post