2018-ல் அதிகபட்சமாக பெட்ரோல் விலை இன்று குறைந்து விற்கப்படுகிறது. டீசல் விலையும் கடந்த 9 மாதங்களில் இல்லாதவகையில் குறைந்து விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றம் டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து 85 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் கடந்த அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டு தற்போது 75 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த அக்டோபர் 18 தொடங்கி தற்போது வரை மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாய் 79 காசுகள் வரை குறைந்துள்ளது. இதேபோல கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு டீசல் விலையும் இன்று குறைந்து விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 71 ரூபாய் 41 காசுகளுக்கும், டீசல் விலை 24 காசுகள் குறைந்து 66 ரூபாய் 35 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
Discussion about this post