பெட்ரோலிய பொருட்களுக்கு பதிலாக, மாற்று எரிப்பொருளை பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இந்தியாவும், சீனாவும் உலகில் அதிகளவு பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோலிய பொருட்களுக்கு பதிலாக, மாற்று எரிப்பொருளை பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்கினார்.
Discussion about this post