சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து 78 ரூபாய் 88 காசுகளுக்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து 74 ரூபாய் 99 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை கடந்த பல மாதங்களாக எண்ணை நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. அதன்படி ஒரு மாதத்திற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தன.
இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் உச்சகட்டமாக 86 ரூபாய் வரை விற்கப்பட்டன. இதனிடையே கடந்த சில வாரங்களாக விலை குறைந்து வந்தன. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 43 காசுகள் குறைந்து 78 ரூபாய் 88 காசுகளுக்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து 74 ரூபாய் 99 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post