கடந்த ஒரு வாரமாக டீசல் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக பெட்ரோல் விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99 ரூபாய் 32 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 93 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து 99 ரூபாய் 20 காசுகளாகவும், டீசல் விலை 14 காசுகள் குறைந்து 93 ரூபாய் 52 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தலின் போது பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தும் அதுகுறித்து திமுக அரசு வாய் திறக்காமல் இருந்தது. பொதுமக்களின் தொடர் கேள்விகளை அடுத்து தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால் கொடுத்த வாக்குறுதியின் படி டீசல் விலையை குறைக்க திமுக அரசு முன்வராதது பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
Discussion about this post