நீதித்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி தேனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். நீதிபதிகள் மீதும் நீதிமன்றம் மீதும் நேரடியாக குற்றம் சாட்டுவதுபோது ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த திவாகர், அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி கோரியுள்ளார்.