கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு பேருந்துகளில் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவரும், மூன்று பேர் அமரும் இருக்கையில் 2 பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்றனர்.
மாநகர பேருந்துகளும் 50 பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போல், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் மட்டும் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.
Discussion about this post