நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில், நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் ஆகாய கங்கை அருவியில் 140 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post