நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நுங்கு மற்றும் பதநீரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த சீசனில் கிடைக்கும் நுங்கு, பதநீர் உள்ளிட்டவை இயற்கை நமக்களித்த கொடையாகும். உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில் அங்கு நுங்கு மற்றும் பதநீர் விற்பனை களைகட்டியுள்ளது. உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு இவற்றை வாங்கிச் செல்கின்றனர். மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நுங்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post