மக்கள் மருந்தகத்தில் மாத்திரைகள் மட்டுமின்றி அனைத்து சத்துப் பொருட்களும், சத்து மாத்திரைகளும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில், மத்திய அரசின் திட்டமான மக்கள் மருந்தகத்தை அவர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, மத்திய அரசின் இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் மிகச் சிறப்பான திட்டத்தில் ஒன்று என்று தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் மருந்தகத்தை அதிக அளவில் திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Discussion about this post