ஈரோட்டில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுவதால், பெரும்பாலான மக்கள் தினந்தோறும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோட்டில் அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
லக்காபுரம் பகுதியில், தனியார் மண்டபத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில், 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், காலை 8 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, முன்கூட்டியே தடுப்பூசியின் எண்ணிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார்.
Discussion about this post