ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கண்மாய், குளங்களில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட அயிரை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் 250 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் உள்ளன.பெரியார் பிளவக்கல் அணை,கோவிலாறு அணையில் இருந்து நீராதாரத்தை பெறும் இந்த நீர் நிலைகளில் அயிரை மீன் பிடிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மருத்துவ குணம் மிக்க அயிரை மீன் குறைவாக கிடைக்கிறது. இதனால் 1 கிலோ அயிரை மீன் விலை 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post