மு.க.ஸ்டாலின் வருகைக்காக பெண்கள், முதியோர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடந்த சம்பவம் அரூரில் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை ஆதரித்து திமுக பிரச்சார கூட்டம் அரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரது வருகைக்காக, காசு கொடுத்து அழைத்து வரப்பட்டிருந்த முதியவர்கள் பல மணிநேரம் வெயிலில் காத்துக் கிடந்தனர்.
வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், தலையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கொடுப்பதற்கு அங்கு யாரும் இல்லை. கூட்டத்திற்கு ஆட்கள் கிடைக்காததால், நபர் ஒருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் பணம் கொடுத்து ஆட்களை வரவழைத்துள்ளனர்.