திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்க திமுக எம்.பி. வர தாமதமானதால் ரேஷன் கடையில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
அமைச்சர்கள் வந்து தொடங்கி வைத்தால் மட்டுமே நிவாரண எதாகை மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என்று ரேஷன் ஊழியர்கள் தெரிவித்து விட்டதால், வேறு வழியின்றி பொதுமக்களும் காத்திருக்கும நிலை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ரேஷன் கடையில் திமுக மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி வருகைக்காக காலை 8 மணியில் இருந்து ரேஷன் கடைமுன் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், 3 மணி நேரம் கழித்து பொறுமையாக வந்த எம்.பி. வேலுச்சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் நிவாரண நிதி வாங்க காத்திருந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். திமுகவினர் சுயவிளம்பரத்திற்காக காக்க வைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post