டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் 111 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறினார். ஆயிரத்து 600 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சிறப்பு மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக லாவ் அகர்வலால் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுமென கூறியுள்ள அவர், தேவையற்ற பரிசோதனைகளை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post