கொளுத்தும் வெயிலால் ஒட்டன்சத்திரம் பகுதியில் தென்னங்கீற்று விற்பனை சூடுபிடித்துள்ளதால் தொழிலாளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை சமாளிக்க பொதுமக்கள் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் தென்னங்கீற்று விற்பனை சூடுபிடித்துள்ளது. விருப்பாட்சியில் நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் தென்னங்கீற்று பின்னும் தொழிலை காலங்காலமாக செய்து வருகின்றனர். இங்கு பின்னப்படும் கீற்றுகள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. வெயிலுக்கு நிழல் தரும் பந்தல் அமைப்பதற்கும், திருமண விழாக்களில் நிழல் கொடைகளாகவும் தென்னங் கீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தென்னங் கீற்று 4 முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 250 லிருந்து 300 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post