நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூரில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடியதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. பல்லடம் சாலையில் உள்ள காய்கறி மற்றும் மீன் சந்தையில் காலை முதலே கூட்டம் அலைமோதியது.
முழு ஊரடங்கு எதிரொலியால் கடலூர் மீன்பிடி சந்தை மற்றும் மீன் அங்காடியில் வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன் விற்பனை செய்யும் பெண்கள் பலரும் முகக் கவசம் அணியாமல் இருந்தனர்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வாரச்சந்தையில், வழக்கம் போல திரண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று வீடுகளுக்கு தேவையான காய் கறிகள், மீன்கள்
உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.
கோவையில் காலை முதலே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் இறைச்சியை வாங்கிச் சென்றனர்.
Discussion about this post