தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும்பாலானோர் வேலையிழந்து வாழ்வாதரத்தை இழந்து வரும் சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் பங்குகளில் 97.43 ரூபாய்க்கும், டீசல் 91.64க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு தங்களுடைய அன்றாட தேவைகளை மிகவும் பாதிப்பதாகவும், ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post