ஹாங்காங் நகரத்தில் குடியிருப்பவர்களை சீனாவிற்கு சோதனைக்கு ஒப்படைக்க அனுமதிக்கும் மசோதா சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது, எதிர்ப்புகள் இருந்து வந்ததால், இந்த மசோதா இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் ராஜினாமா செய்யக்கோரியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போரட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் பலர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Discussion about this post