திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பாதியிலேயே சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதியிலேயே சென்றநிலையில், அவர்களை திமுக நிர்வாகிகள் கெஞ்சி மீண்டும் கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

நிலக்கோட்டையில் திமுக சார்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமின்றி, பொதுமக்கள் தொடர்ந்து வெளியில் சென்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து காலியாக இருந்த சேர்களை பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர், பொதுமக்களிடம் கெஞ்சி சேர்களில் மீண்டும் அமரும்படி வலியுறுத்தினர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வெளியில் சென்றனர்.

இதனால் ஐ.பெரியசாமி பேசும்போதும் சேர்கள் காலியாகவே காணப்பட்டன. நாளுக்கு நாள் திமுக கூட்டங்களில் மக்கள் கூட்டம் காலியாவதைக் கண்டு, டெபாசிட்டாவது கிடைக்குமா? என வேட்பாளர்கள் கலங்கிப் போயுள்ளனர்.

Exit mobile version