கோடை வெப்பம் தாங்காமல் சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் அலை மோதும் மக்கள் கூட்டம் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கத்திரி வெயில் சென்னை நகரை சுட்டெரித்து வருகிறது. வெப்பம் தாங்காமல் குளிர் பானம் நீர்மோர் அருந்தி சூட்டை தனிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய வரமாய் அமைந்ததே கடற்கரை. வாரவிடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்காண மக்கள் கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகள் மட்டும் அல்லாமல் வேலூர் திருவள்ளூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட மக்களும் கடற்கரையில் உல்லாசமாய் நீராடுகின்றனர். சுட்டெரிக்கும் கோடை வெப்பத்திலிருந்து மீள பல மணிநேரம் கடற்கரையில் நீராடி மகிழும் அவர்கள் ஏசி உள்ளிட வசதிகள் கூட இல்லாத தங்களுக்கு கடற்கரை குளியல் பேரின்பமாய் அமைந்ததாகக்கூறினர்.
கடற்கரை குளியல் மட்டுமல்லாமல் பலூன் தூப்பாக்கிச்சுடுதல் குதிரைசவாரி பஜ்ஜி உள்ளிட்ட நொருக்கு தின்பண்டங்கள் என அனைவரும் வரவேற்கும் வகையில், ஏழைகளின் தீம் பார்க்காகவே கடற்கரை அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
Discussion about this post