பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி 14 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இந்நிலையில் ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் வள்ளலார் தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை பெருநகருக்கும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டுவர, மாவட்ட துணை பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படாது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post