ஜப்பானின் கியூஷு தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்தனர். ஜப்பானின் மியா சாகிஷி பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்நிலையில் இன்று காலை தெற்கு கடற்கரை பகுதியான கியூஷு தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியாசாகிஷியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தையொட்டி மியாசாகிஷியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
Discussion about this post