பேரிடர்களின் போது ஆராய்ச்சியின் மூலம் பெறப்படும் தகவல்கள் வைத்து மக்கள் பீதி அடைய கூடாது என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி கடலூர் நகர அரங்கில் குழந்தைகளுக்கான தேசிய புத்தக கண்காட்சியினை இந்திய
விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தக வாசிப்பு குறைந்தால் இணையதளங்கள் கூறும் அனைத்தையும் நம்பும்படி ஆகி விடுவதாக தெரிவித்தார். மேலும் விண்வெளி பயணத்தில் நிலவில் நீர் இருப்பதை இந்தியா தெரிவித்ததையடுத்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பயணம் தொடங்கி உள்ளதாகவும், அதில் இந்தியர்களும் செல்வதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
பேரிடர்களின் போது வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புகளை முன்னெச்சரிக்கையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியின் மூலம் பெறப்படும் தகவல்கள் வைத்து மக்கள் பீதி அடைய கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post