டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. 3.7 டிகிரி செல்சியஸிற்கும் கிழே வெப்பநிலை உள்ளதால் பகலில் வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதில் அதிக பட்சமாக முசாபர் நகரில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. காலையில் குளிர் அதிகமாக காணப்படுவதால் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பகலிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் விளக்குகளுடன் வாகனங்கள் செல்கின்றன. இதுமட்டுமல்லாது காற்று மாசு கருவியில் மிக அதிக அளவான 400ஐ காற்று மாசு எட்டியுள்ளது. இதனால் மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post