ரெப்போ ரேட் குறைப்பால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று அகில இந்திய வங்கிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தாமஸ் பிறாங்கோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ரிசர்வ் வங்கியிடம் புதிதாக கடன் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் பட்சத்திலேயே வங்கிகள் வட்டி விகித்ததை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய நிலையில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கக்கூடிய சூழல் இல்லை என்றும் கூறியுள்ளார். மத்திய அரசின் தேர்தல் யுத்தியே இந்த அறிவிப்பு என்றும் தாமஸ் பிறாங்கோ குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post