தொழிலுக்கு உதவியாக இருக்கும் தொழிற்கருவிகளை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும், கல்வியை வழங்கும் சரஸ்வதி தேவியை வணங்கும் நாளாக சரஸ்வதி பூஜையும் தமிழகத்தில் மரபுவழியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று ஆயுதபூஜை திருநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, வாகனங்கள், தொழில் கருவிகள், நிறுவனங்களில் உள்ள இயந்திரங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி, வாழைமரம் மற்றும் தோரணங்களால் அலங்கரித்து, பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஆயுதபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் பூ, பழங்களின், பொரி கடலை போன்ற பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது.
குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில், பூஜைப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொரி கடலை, மஞ்சள் கொத்து, மாவிலைத் தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக, விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆயுத பூஜை ஒட்டி, பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
Discussion about this post